அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கு நேர்முகத் தேர்வு

சென்னை : இந்திய அஞ்சல்துறை சார்பில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களை தேர்வு செய்வதற்கான ஆட்சேர்ப்பு முகாம் எதிர்வரும் 30ந் தேதி நடைபெறவிருக்கிறது.

சென்னை, அண்ணாசாலை தலைமை அலுவலகத்தில் உள்ள தலைமை அஞ்சல்துறை தலைவர் அலுவலகத்தில் இதற்கான நேர்முகத் தேர்வு 30ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுவதாகவும், விண்ணப்பதாரர்கள் 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும், சென்னை நகரில் வசிப்பவர்களுக்கும், ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கும் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது கல்வி, வயது உள்ளிட்ட சான்றிதழ்களையும் அவசியம் கொண்டுவர வேண்டும் எனவும் அஞ்சல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.