நாட்டின் 15வது ஜனாதிபதியான திருமதி.திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், கவர்னர்கள், மாநில முதல்வர்கள், வெளிநாட்டு தூதர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.