ஐ.ஐ.டி.யில் பி.எஸ்., டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ்

ஐ.ஐ.டி.யில் பி.எஸ்., டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ்

ஆன்லைன் படிப்புக்கான மாணவர் சேர்க்கை…

பி.எஸ்., டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் எனும் ஆன்லைன் வழி படிப்பினை, தேசிய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி. நடத்தி வருகிறது.

இந்த ஆன்லைன் வழி படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, தாங்கள் உருவாக்கிய வீடியோ பாடங்களை வழங்குவதோடு, உரிய நேரங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு, சான்றிதழினையும் வழங்குகிறது ஐ.ஐ.டி.

இந்நிலையில் 2023ஆம் ஆண்டு ஜனவரிக்கான மாணவர் சேர்க்கை குறித்து ஐ.ஐ.டி. அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

விருப்பம் உள்ள மாணவர்கள் https://onlinedegree.iitm.ac.in/ என்ற இணையதளத்தில், ஜனவரி 16ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில், வேலைவாய்ப்பு சார்ந்த பாடத் திட்டங்களை கொண்ட இந்த ஆன்லைன் வழி படிப்பில் சேர எந்த நாட்டில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்த ஆன்லைன் வழி படிப்பின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ஒரு கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் திட்டமிடப்பட்டிருக்கும் இப்படிப்பில் சேர்வதற்கான கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, படிப்பு காலம்.. உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் https://onlinedegree.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.