சட்டம் என்ன சொல்கிறது
உயில் எழுதி வைக்காமல் கணவர் இறந்துவிடும் சூழ்நிலையில், அவரது சொத்தில் பங்கு கேட்க, யார் யாருக்கெல்லாம் உரிமை உள்ளது என்பதில் இன்றளவும் குழப்பங்கள் நீடிக்கின்றன.
தந்தை இறந்துவிடும் போது, வாரிசுகளாக உள்ள அனைவரும் சொத்தில் பங்கு கேட்கலாம் என்றாலும், கணவர் இறக்கும் போது கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு சொத்தில் பங்கு உள்ளதா என்பது இன்றளவும் புரியாத புதிராகவே இருக்கிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் மனைவியின் பெயருக்கும், பிறந்த வாரிசுகளின் பெயருக்கு மட்டுமே இதுவரை சொத்துக்கள் பங்கிடப்பட்டு வருகின்றன.
கணவர் இறக்கும் போது, கருவாக உருவான குழந்தையும் ஒரு வாரிசாக கணக்கிடப்பட்டு, சொத்து பங்கு பிரிக்கப்பட வேண்டும் என்றுதான் சட்டம் சொல்கிறது.
அதேசமயம் கருவில் இருக்கும் குழந்தைக்கு பெயர் இருக்காது என்பதால், ஆவணத்தில் உரிய காரணத்தை தெளிவாக எழுதி பங்கு கொடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட அந்த சொத்துக்கு கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் தாய் காப்பாளராக இருப்பார்.
பிரசவத்துக்கு பிறகு குறிப்பிட்ட சொத்து குழந்தையின் பெயருக்கு மாறினாலும், அந்த குழந்தை வயது வந்த நிலையில்தான் சொத்து குறித்த நிர்வாக முடிவுகளை அந்த குழந்தை எடுக்க முடியும் என்கிறது சட்டம்.