தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தகுதிவாய்ந்த இளம் கலைஞர்களுக்குக் கலை நிறுவனங்களின் வாயிலாகக் கலை நிகழ்ச்சிகள் நடத்திட வாய்ப்புகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 2020-2022ஆம் ஆண்டுக்கான இளம் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இளம் கலைஞர்களின் விவரம் வருமாறு,
இசைத் துறையின் சார்பில் குரலிசைக்காக சென்னையைச் சேர்ந்த செல்வி ப.அக்சயா, செல்வி சு.கீர்த்தனா, செல்வன் என்.ரித்கேஷ்வர், கோவையைச் சேர்ந்த செல்வி ஜி.அபர்ணா ஆகியோரும்,
தனி வயலினுக்காக சென்னையைச் சேர்ந்த செல்வன் எஸ்.சிவராமும்,
வயலினுக்காக சென்னையைச் சேர்ந்த செல்வன் வி.பார்கவ விக்னேஷூம்,
மிருதங்கத்துக்காக சென்னையைச் சேர்ந்த செல்வன் மு.ஜெயந்திரகுமார், செல்வன் அ.ரோஹித், செல்வன் டி.ஆர்.சூரஜ், செல்வன் யஷ்வந்த் ரவி, ராணிப்பேட்டையைச் சேர்ந்த செல்வன் எல்.வினோத் ஆகியோரும்,
கஞ்சிராவுக்காக சென்னையைச் சேர்ந்த செல்வி டி.பூஜா, செல்வன் பெ.ஆகாஷ்குமார் ஆகியோரும்,
முகர்சிங்குக்காக தஞ்சாவூரைச் சேர்ந்த செல்வி ர.கீர்த்தனா, செல்வன் ர.ஹரிகிருஷ்ணன் ஆகியோரும்,
நாதஸ்வரத்துக்காக சென்னையைச் சேர்ந்த செல்வன் வெ.சீனிவாசன், செல்வன் டி.குகன் ஆகியோரும்,
பரதநாட்டியத் துறையின் சார்பில் சென்னையைச் சேர்ந்த செல்வி மிருதுளா சிவகுமார், செல்வி எல்.ஸ்வேதா, செல்வி எல்.புவனேஸ்வரி, செல்வி ரா.அபராஜிதா, செல்வி சாத்விகா அரவிந்தன், செல்வி ரா.லஷ்மி பிரியா, செல்வி ஆனாஹிதா சாலிஹா, செல்வி க.காவ்யா, செல்வி ரா.ஹரிணி, கேரளாவைச் சேர்ந்த செல்வி பி.வித்யா ஆகியோரும்,
கிராமியத் துறையின் சார்பில் பொம்மலாட்டத்திற்காக கும்பகோணத்தைச் சேர்ந்த செல்வன் எம்.கார்த்திகேயனும், வில்லுப்பாட்டுக்காக திருநெல்வேலியைச் சேர்ந்த செல்வன் ப.மாரியப்பனும், கரகாட்டத்திற்காக ஈரோடைச் சேர்ந்த செல்வி க.தேவி, கடலூரைச் சேர்ந்த செல்வன் மா.பத்மநாபன், சேலத்தைச் சேர்ந்த செல்வன் ச.முகமது ஹக்கீமும், மரக்கால் ஆட்டத்திற்காக திருப்பத்தூரைச் சேர்ந்த செல்வன் அ.ஜோதி பாஸும், ஒயிலாட்டத்திற்காக மதுரையைச் சேர்ந்த செல்வன் இ.தீபன் ராஜ், செல்வன் கி.மோகன் பிரகாஸும், பம்பைக்காக திருப்பத்தூரைச் சேர்ந்த செல்வன் எஸ்.சக்திவேலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டிருக்கும் மேற்கண்ட ஒவ்வொரு கலைஞர்களுக்கும் தலா நான்கு நிகழ்ச்சிகள் தமிழகத்திலுள்ள கலை நிறுவனங்கள் வாயிலாக வழங்கப்படுவதோடு, இத்திட்டத்திற்காக மொத்தம் ரூ 20.00 லட்சம் நிகழ்ச்சிக்காக வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் தெரிவித்துள்ளார்.