காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இரவு நேர காவலர் பணி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் காலியாக உள்ள இரவுக் காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,


“காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் காலியாக உள்ள இரவுக் காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒரு இரவுக் காவலர் பணிக் காலியிடத்துக்கு பொதுப் போட்டி மற்றும் இன சூழற்சிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதுவரம்பு 18. அதிகபட்ச வயதுவரம்பு முற்பட்ட வகுப்பினர் வயது 32. பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 34. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 37.

இதற்கான கல்வித் தகுதி, எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. இந்த விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 28ந் தேதி முதல் ஜனவரி மாதம் 13ந் தேதி வரை மாலை 5.45 மணிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்துக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.”

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.