தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை – எழும்பூர் அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில் 75-வது “சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா”வினை சிறப்பிக்கின்ற வகையில் நிறுவப்பட்டுள்ள உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு மற்றும் மகேசன் காசிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.