தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்
தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பிரபல நடிகையாக சின்னத்திரையை கலக்கி கொண்டிருப்பவர் மகாலட்சுமி.
‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ பட நிறுவனம் மூலம் ‘சுட்ட கதை’, ‘நளனும் நந்தினியும்’, ‘நட்புனா என்னானு தெரியுமா’… உள்ளிட்ட படங்களை தயாரித்திருப்பவர் பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், இயக்குநருமான ரவீந்தர் சந்திரசேகரன்.
மகாலட்சுமி, ரவீந்தர் சந்திரசேகரனின் திடீர் திருமணம் இன்று திருப்பதியில் மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டார் முன்னிலையில் இனிதே நடந்தேறியது.
‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ தயாரித்து வரும் “விடியும் வரை காத்திரு” படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தடம் பதித்திருக்கும் மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி, அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
சமூக வலைதள பக்கங்களில் “மகாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்வாங்க.. ஆனா, மகாலட்சுமியே வாழ்க்கையா கிடைச்சா… குட்டி ஸ்டோரி வித் மை பொண்டாட்டி!” என்று மகாலட்சுமியை இரண்டாவதாக மணந்திருக்கும் ரவீந்தர் சந்திரசேகரனும்,
“என் வாழ்க்கையில் நீங்கள் இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்.. உங்கள் அன்பால் என் வாழ்க்கையை அழகாக்கிவிட்டீர்கள்.” என்று ரவீந்தர் சந்திரசேகரகனை இரண்டாவதாக மணம் புரிந்திருக்கும் மகாலட்சுமியும் பதிவிட்டுள்ளனர்.
இவ்விருவரும் தங்களுடைய முந்தைய திருமண வாழ்க்கையை மறந்து புது வாழ்க்கையில் அடி எடுத்து வைத்திருப்பதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.