குழந்தைத் தொழிலாளர்கள், கட்டாய தொழிலாளர்கள் மற்றும் ஆட்கடத்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம்...

குழந்தைத் தொழிலாளர்கள், கட்டாய தொழிலாளர்கள் மற்றும் ஆட்கடத்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம்...

இன்று (04.11.2022) தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் எஸ்.பாஸ்கரன் தலைமையில், அமெரிக்க தொழிலாளர் துறையைச் சார்ந்த பிரதிநிதிகள் குழு திருமதி.விர்சா பெர்கின்ஸ் (Ms.Virsa Perkins, Political Economic Chief, U.S. Consulate General, Chennai) “குழந்தைத் தொழிலாளர்கள்,கட்டாய தொழிலாளர்கள் மற்றும் ஆட்கடத்தல்”குறித்து தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த இந்திய ஆட்சிப் பணியாளர்கள், இந்திய காவல் பணி அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தகவல் தொழில் நுட்பத் துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மிட்டல் இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையச் செயலாளர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப., அமெரிக்க தொழிலாளர் துறையைச் சார்ந்த பிரதிநிதிகள் குழுவினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.