தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால், பாஜக ஒரு தொகுதியில்கூட ஜெயிக்காது என்று தெரிவித்திருந்த மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது,
சுதந்திரா கட்சி மற்றும் சிபிஎம் கட்சிகளுடனான கூட்டணியின் காரணமாகத்தான் 1967ஆம் ஆண்டு, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்ததே தவிர அதன் சொந்த பலத்தால் அல்ல.
2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் தனி பலத்தால் அல்ல. 12 கட்சிகளுடன் மெகா கூட்டணி வைத்ததாலேயே ஆட்சிக்கு வர முடிந்தது.
1967லிருந்து, திமுக ஒரே ஒரு தேர்தலில்கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டிருக்கிறது.
இப்படி பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும், நீங்கள் படுமோசமான தோல்வியை சந்தித்த தேர்தல்களும் உண்டு மு.க.ஸ்டாலின் அவர்களே.
யதார்த்தத்தை எதிர்கொள்ளுங்கள் மு.க.ஸ்டாலின். துணைப் பிரதமராகும் உங்களின் லட்சியம் கலைந்துபோய் நெடுங்காலம் ஆகிவிட்டது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாஜக 2024ஆம் ஆண்டு தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறும்.
தமிழக பாஜக கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனிவரும் காலங்களில், அதை மீண்டும் செய்யத் தயங்காது.
நான் உங்களுக்கு சவால் விடுகிறேன் மு.க.ஸ்டாலின், கூட்டணி இல்லாமல் போட்டியிட தி.மு.க தயாரா?