சமூக ஊடகங்கள் தொடர்பான சான்றிதழ் பயிற்சி...

சமூக ஊடகங்கள் தொடர்பான சான்றிதழ் பயிற்சி...

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும (AICTE) திட்டப் பிரிவு ஆலோசகரான ரமேஷ் உன்னி கிருஷ்ணன்,அனைத்து தொழில்நுட்ப பல்கலைக் கழக துணை வேந்தர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது,

“மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியோடு சமூக ஊடகங்கள் தொடர்பான சான்றிதழ் பயிற்சி,கல்வியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

சமூக ஊடகங்கள் வாயிலாக கற்பிப்பதற்கான யுக்திகள், தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள் மூலம் குறைந்த செலவில் கல்வியாளர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும்.

இணைய வழியில் வழங்கப்படும் 90 மணி நேர பயிற்சிக்கான கல்விக் கட்டணமாக 88.50 ரூபாயும்,மதிப்பீட்டுக் கட்டணமாக 600 ரூபாய் வசூலிக்கப்படும்.

இப்பயிற்சியில் பங்கேற்க https://socialmobileskills.in/pretraining/ என்ற இணைய தளத்தை அணுகலாம்.

இப்பயிற்சி குறித்த மேலும் தகவல்களுக்கு https://drive.google.com/drive/folders/1×5Oklz3w5w6xsUSo_txvTMMfeAiZiPEM என்ற இணைய தளத்தை அணுகலாம்.

இப்பயிற்சியை திறம்பட நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.”

இவ்வாறு அவர் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.