சென்னை : சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, பிப்ரவரி மாதம் 15ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 21ந் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும். 10.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கி, பிற்பகல் 1.30 மணி வரை நடக்கும்.
அதேபோல், 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் 15ந் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 5ந் தேதி வரை நடைபெறவிருக்கிறது. தேர்வுகளின்போது காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட்டு, 10.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கி, பிற்பகல் 1.30 மணி வரை நடக்கும்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பாடங்களுக்கான விரிவான தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ.யின் இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.