சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்த கலந்தாய்வு கூட்டம்...

சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்த கலந்தாய்வு கூட்டம்...

இன்று (16.09.2022) தலைமைச் செயலகத்தில்,தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தலைமையில், ஐக்கிய நாடுகள் சபை எதிர்வரும் 2023ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளதையொட்டி, தமிழ்நாட்டில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகள் மேற்கொள்ள வேண்டிய விளம்பரப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார் இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் சி.சமயமூர்த்தி இ.ஆ.ப., உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.