சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா பூங்கா...

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா பூங்கா...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை – கஸ்தூரிபாய் எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் எம்.ஆர்.டி.எஸ்.ரயில் நிலையம் வரை பக்கிங்ஹாம் கால்வாய் வரையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவிற்கு, 75-வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் “சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாப் பூங்கா” என்று பெயர் சூட்டப்பட்ட பூங்காவின் பெயர் பலகையை திறந்து வைத்து,மரக்கன்று நட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச்.ஹசன் மௌலானா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, WHO அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.