சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்சின் Superssmart ஆப் அறிமுகம்!

சென்னையில் சுமார் 50 ஆண்டு காலமாக ரீடைல் விற்பனையில் யாரும் எட்ட முடியாத ஆதிக்கத்தைும், உயரத்தையும் எட்டியுள்ள முன்னணி ரீடைல் நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், இ-காமர்ஸ் உலகில் நுழைந்து தனது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
ஆன்லைன் விற்பனையில் இருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் ஆப்லைன் சந்தைக்குள் வரும் வேளையில், தற்போது ஆப்லைனில் அசத்தி வரும் பிரபலமான பிராண்டுகள் ஆன்லைன் வர்த்தக்திற்குள் நுழைந்து வருகிறது. இந்த டிரெண்டில் தான் தற்போது சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் களத்தில் இறங்கியுள்ளது.

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் தனது ரீடைல் வர்த்தகத்தை ஈகாமர்ஸ் துறைக்குள் கொண்டு செல்ல புதிய ஷாப்பிங் செயலியான Superssmart -ஐ செப்டம்பர் 18 ஆம் தேதி அறிமுகம் செய்தது. ஈகாமர்ஸ் வரத்தகம் நாட்டின் அனைத்து பகுதி மக்களையும் சென்றடையும் வேளையில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் முக்கிய வர்த்தக முடிவை எடுத்துள்ளது. ஷாப்பிங் செய்பவர்களுக்கு சிறப்பான ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சரவணா ஸ்டோர் அண்ணாச்சிக்கே நோட்டீஸா.. காரணம் என்ன.. எதற்காக நோட்டீஸ்..! சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குரூப்-ஐ தற்போது அதன் நிறுவனர் ராஜரத்தினம் சண்முகசுந்தரம் தலைமையில் இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சபாபதி ராஜரத்தினம் தலைமையில் ஈகாமர்ஸ் வர்த்தக விரிவாக்கம் நடந்துள்ளது. ஈகாமர்ஸ் துறையில் இறங்குவதன் மூலம் இந்தியா முழுக்க வர்த்தகத்தை கொண்டு செல்லும் முயற்சியிலும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குரூப் இறங்க உள்ளது. மேலும் ஈகாமர்ஸ் துறையின் வர்த்தகத்தை நிர்வாகம் செய்ய அடுத்த தலைமுறை தலைவர்கான ஹோஷன் ஸ்ரீ ரத்தினம், யோகேஷ் ஸ்ரீ ரத்தினம் ஆகியோர் நிர்வாக பணியில் இணைந்துள்ளது. ஈகாமர்ஸ் வர்த்தகத்தின் அறிமுகம் மூலம் 3 தலைமுறையும் இணைந்து சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குரூப் வர்த்தகத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல உள்ளனர்.