தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் சர்வதேச ‘செஸ் ஒலிம்பியாட்’ வீரர், வீராங்கனைகளுக்கு மைண்ட் வாய்ஸின் வாழ்த்துகள்..!
இந்தியாவிலேயே முதல்முறையாக சர்வதேச அளவிலான ‘செஸ் ஒலிம்பியாட் – 2022’ போட்டியை நடத்தும் பெருமையை தமிழகம் பெற்றிருக்கிறது. 180-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டியில் களமாடும் தமிழக வீரர், வீராங்கனைகள் வெற்றி வாகை சூட “மைண்ட் வாய்ஸ்” மனதார வாழ்த்துகிறது.
செஸ் போட்டிபோல, அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, சர்வதேச அரங்கில் தமிழகத்தை தலைநிமிரச் செய்ய தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.