டிசம்பர் மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கோட்டா நாளை மறுநாள் அதாவது நவம்பர் 11ந் தேதி வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட உள்ளதாக திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
முன்பதிவு திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டினை பெற விரும்பும் பக்தர்கள் www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.