தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா..!

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா..!

2009 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், "காக்கா முட்டை" திரைப்படத்திற்கு சிறந்த படம் சிறப்பு பரிசுக்கான காசோலையை இயக்குநர் வெற்றி மாறனுக்கு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
2009 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், "கயல்" திரைப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசினை ஆனந்திக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
2009 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில்,சிறந்த சாதனையாளருக்கான விருதினை டெல்லி கணேஷுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

04.09.2022 அன்று நடைபெற்ற அரசு திரைப்பட விருதுகள் வழங்கிய விழாவில் பங்கேற்க இயலாத 41 விருதாளர்களுக்கு இன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

2009 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா 04.09.2022 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு ரொக்கத்திற்கான காசோலையும் சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மற்றும் சின்னத்திரையின் சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்கள். சிறந்த கதாநாயகன், சிறந்த கதாநாயகி, தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் பெறும் விருதாளர்களுக்கு தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் என 255 விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

மேலும்,அன்றைய தினம் நடைபெற்ற விழாவில் பங்கேற்க இயலாத 41 விருதாளர்களுக்கான தங்கப்பதக்கம், காசோலை, நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்களை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (30.10.2022) வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., வரவேற்புரை நல்கினார். கூடுதல் இயக்குநர் (செய்தி) சிவ.சு.சரவணன் நன்றியுரையாற்றினார்.கூடுதல் இயக்குநர் (ம.தொ) மு.பா.அன்புச்சோழன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.