துபாயில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா

சென்னை : உருமாறிய கொரோனா வைரஸான BF.7 வைரஸ் இந்தியா முழுவதும் ஸ்டெப் பை ஸ்டெப்பாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், சீனாவில் இருந்து மதுரை வந்த விருதுநகரைச் சேர்ந்த தாய், மகள் இருவருக்கும் ஏற்கனவே கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுக்காவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவரும் தனிமைபடுத்தப் பட்டுள்ளதோடு அவர்களுடன் பயணித்த சக பயணிகள் அனைவரும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரேண்டம் முறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ள இருவரின் சோதனை மாதிரிகளும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வின் முடிவிலேயே இது புதிய வகை கொரோனாவா? இல்லையா? உருமாறிய தொற்றா? என்பது பற்றியெல்லாம் தெரியவரும் என்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.