சென்னை : அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெற்ற தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கான பிப்ரவரி மாத தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுக்கு கடந்த மாதம் 27ந் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
இத்தேர்வினை எழுத விரும்புவோர் www.tndtegteonline.in என்ற இணையதளத்தில் ஜனவரி மாதம் 20ந் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும், விண்ணப்பப் பதிவில் பிழைகள் ஏதேனும் இருப்பின் அதை ஜனவரி மாதம் 23ந் தேதி முதல் 25ந் தேதிக்குள் திருத்தம் செய்து கொள்ள வசதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் பிப்ரவரி மாதம் 11ந் தேதி தொடங்கி, பிப்ரவரி மாதம் 26ந் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
சுருக்கெழுத்து உயர் வேகத் தேர்வு பிப்ரவரி மாதம் 11 மற்றும் 12ந் தேதிகளிலும், சுருக்கெழுத்து இளநிலை, இடைநிலை மற்றும் முதுநிலைத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் 18 மற்றும் 19ந் தேதிகளிலும், வணிகவியல் இளநிலை மற்றும் முதுநிலைத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் 20ந் தேதியும், தட்டச்சர் இளநிலை, முதுநிலை மற்றும் உயர் வேகத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் 26ந் தேதியும் நடைபெறவிருக்கிறது.
ஏப்ரல் மாதம் 21ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், மேலும் விவரங்களை, www.tndtegteonline.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.