பிரதமரின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 2-வது திங்கள்கிழமை தொழிற் பயிற்சி மேளா...

பிரதமரின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 2-வது திங்கள்கிழமை தொழிற் பயிற்சி மேளா...

பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய தேசிய திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் திங்கள்கிழமை அன்று தேசிய தொழிற்பயிற்சி மேளா நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதிலும் உள்ள தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழில் நேரடி செயல் முறை பயிற்சிகளை ஊக்குவிக்க திறன் இந்தியா திட்டத்தை (Skill India) பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் (MSDE – Ministry Of Skill Development and Entrepreneurship) நாடு முழுவதிலும் உள்ள 280 இடங்களில் தொழில் பயிற்சி மேளாவினை நேற்று நடத்தியது. பயிற்சிகள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளூர் வணிக நிறுவனங்கள் இந்த மேளாக்களில் பங்கேற்றன.

இந்த மேளாவில் தேர்வு செய்யப்பட்டோருக்கு புதிய திறன் பயிற்சிகளை பெறுவதற்காக மாதாந்திர உதவித் தொகையினை மத்திய அரசு வழங்கி வருவதாக திறன் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வேலை வாய்ப்பினை அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் இரண்டாவது திங்கள்கிழமை இந்த தொழிற் பயிற்சி மேளா நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் பங்கேற்கும் இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் நேரடி திறன் பயிற்சியும், வேலைவாய்ப்பும் பெற்று வருகின்றனர் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.