நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது, “அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.பகவான் விநாயகரின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்கட்டும்.யார் மீதும் தீய எண்ணம் கொள்ள வேண்டாம். கருணை, சகோதரத்துவம் ஆகிய உணர்வுகள் எப்போதும் நிலைத்திருக்கட்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.