டெல்லி : மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வு (க்யூட்) முறை கடந்தாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023 – 2024ஆம் கல்வி ஆண்டிற்கான க்யூட் தேர்வு தேதி அறிவிப்பினை யுஜிசி தற்போது வெளியிட்டுள்ளது.
மத்திய பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான CUTE நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்குவதாகவும், CUET இளங்கலை தேர்வுகள் அடுத்த ஆண்டு மே மாதம் 21 முதல்- 31ந் தேதி வரை நடைபெறும் என்றும், இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும், இதேபோல் முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு அடுத்தாண்டு ஜூன் முதல் அல்லது 2-வது வாரத்தில் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்பட உள்ளதாகவும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.