இன்று (01.10.2022) புது தில்லியில், மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது மத்திய அரசின் நிதித்துறை செயலாளர் முனைவர் டி.வி.சோமநாதன் இ.ஆ.ப., பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அஜய் சேத் இ.ஆ.ப., மற்றும் தமிழ்நாடு அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் இ.ஆ.ப., ஆகியோர் உடன் இருந்தனர்.