இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனநல நல்லாதரவு மன்றத்தின் ‘மனம்’ தூதுவர் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார் இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.