மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

இன்று கரூரில், மக்களை வஞ்சிக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்து பா.ஜ.க. மாவட்ட தலைவர் V.V.செந்தில்நாதன் தலைமையிலும், மாநிலத் துணைத் தலைவர் K.P.ராமலிங்கம் முன்னிலையிலும் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தற்போது அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட்டு, தமிழக மின் வாரியத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை முதலில் செயல்படுத்திட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.