ரவுடிகளை கண்காணிக்க "ட்ராக் கேடி" செயலி!

ரவுடிகளை கண்காணிக்க "ட்ராக் கேடி" செயலி!

அறிமுகம் செய்து வைத்தார் சி.சைலேந்திரபாபு…

தமிழகம் முழுவதிலும் உள்ள ரவுடிகள் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய “ட்ராக் கேடி” (TrackKD) செயலியை காவல் துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழகத்தில் உள்ள மொத்த ரவுடிகளின் எண்ணிக்கை எவ்வளவு? தமிழக ரவுடிகளில் எத்தனை பேர் சிறைகளில் உள்ளனர்? ஜாமீனில் வந்துள்ள ரவுடிகள் யார் யார்? எந்தெந்த ரவுடிகளிடம் உறுதிமொழி பத்திரம் வாங்கப்பட்டுள்ளது? எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? யார் யார் எந்தெந்த மாதிரியான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்?.. என்பது குறித்த முழு விபரங்கள் இச்செயலியில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இச்செயலியில் 39 மாவட்டங்கள், 9 ஆணையரகங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு, டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

ரவுடிகளின் நடவடிக்கைகளை எளிதாகவும் அதேசமயம் தொடர்ந்து கண்காணிக்கவும், தகவல்கள் அறியவும் “ட்ராக் கேடி” என்ற மொபைல் போன் செயலியை சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் மேற்பார்வையில், தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான குழு உருவாக்கி உள்ளது.

இந்த மொபைல் போன் செயலியை காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு அறிமுகப்படுத்தி வைத்தார். உடன் சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்டோர் இருந்தனர்.