தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (2.11.2022) தலைமைச் செயலகத்தில், வர்ஷினி இல்லம் அறக்கட்டளை சார்பில் வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வீட்டிற்கே சென்று தரமான சிகிச்சை மற்றும் தொடர் சிகிச்சை வழங்கும் “விதை” திட்டத்தின் கீழ், அனைத்து சிகிச்சை உபகரணங்களும் கொண்ட நடமாடும் வாகனத்தின் (Mobile Theraphy Van) சேவையை தொடங்கி வைக்கும் விதமாக அவ்வாகனத்திற்கான சாவியை அறக்கட்டளையின் அறங்காவலர் செல்வி பி.வி.வர்ஷினியிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வர்ஷினி இல்லம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பி.என்.வாசுதேவன், அறங்காவலர்கள் ஜான் அலெக்ஸ், எம்.ஆனந்தன், ஆலோசகர் திருமதி தீபா முரளி, அமர் சேவா சங்கத்தின் நிறுவனத் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன், கௌரவ செயலாளர் எஸ்.சங்கர ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.