வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக 10 I.A.S., அதிகாரிகள் நியமனம்!

வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக 10 I.A.S., அதிகாரிகள் நியமனம்!

சத்ய பிரதா சாகு

“இந்தியத் தேர்தல் ஆணையத்தால் புகைப்பட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 01.01.2023 தேதியினை தகுதியாக கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை கண்காணிக்கும் பொருட்டு,இந்தியத் தேர்தல் ஆணையம் 10 மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக நியமனம் செய்துள்ளது.

இவ்வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் சுருக்க முறை திருத்தப் பணிகளை,அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குறைந்தது மூன்று முறையாவது பயணம் மேற்கொண்டு,மேற்பார்வையிட்டு,அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கூட்டங்களை நடத்துவதோடு,பொதுமக்களைச் சந்தித்தும் வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்கள் குறித்தும் ஆய்வு செய்வர்.அவர்களின் ஆய்வுக்குப் பின்னர்,தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையை அனுப்புவர்.

இந்நிலையில்,இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ள நாட்களான 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022-இல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து வாக்களர் பட்டியல் சார்ந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்வர்” என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.