பெருநகர சென்னை மாநகராட்சி, சாந்தோம் சி.எஸ்.ஐ. காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கான மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியினை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு இ.ஆ.ப., இன்று (09.11.2022) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் திருமதி ஆனி ஜோசப், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் விஷூ மஹாஜன் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) ஜி.குலாம் ஜிலானி பப்பா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குநர் ரவீந்திரநாத் சிங், சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் எஸ்.குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.