விருது பெற்ற தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்!

விருது பெற்ற தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்!

போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் இன்று (14.11.2022) தலைமை செயலகத்தில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்பட்ட விருதினை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

ஒவ்வொரு வருடமும் நகர்புற உள்கட்டமைப்பு (Business Urban Infra Group Publication) சார்பாக பொதுமக்களிடம் நட்புணர்வோடு செயல்படும் நிறுவனங்களை கௌரவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்குவது நடைமுறையில் உள்ளது.

தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கிணங்க பயணிகள் வசதியினை மேம்படுத்தும் பொருட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு எற்படும் குறைகளை What’s app மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் தீர்வு செய்வதற்கான பொறிமுறைகளை (Mechanisam) உருவாக்கி உடனுக்குடன் தீர்வு செய்வதற்காக பயணிகள் மத்தியில் செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றமைக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை பாராட்டி 2022-ம் வருடத்திற்குரிய விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் மேற்கூறிய நிறுவனத்தின் சார்பாக முதன்மை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக ஆசிரியர் மூலம் புது டெல்லியில் 7.11.2022 அன்று நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் மேற்படி விருது மற்றும் பாராட்டு சான்றிதழை பெற்றுக் கொண்டார்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்பட்ட இவ்விருதினை போக்குவரத்துத் துறை அமைச்சர எஸ்.எஸ். சிவசங்கரிடம் மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் மற்றும் பொது மேலாளர் ஆகியோர் காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.