பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 5க்கு உட்பட்ட என்.எஸ்.சி.போஸ் சாலை, சென்ட்ரல் ஸ்டேஷன், வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் சந்திப்பு மற்றும் மண்டலம் 6க்கு உட்பட்ட புளியந்தோப்பு நெடுஞ்சாலை, Demellows சாலை, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், துணை மேயர் மு.மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும், முதன்மைச் செயலாளருமான ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.