ஸ்டாலினுடன், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சந்திப்பு...

ஸ்டாலினுடன், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சந்திப்பு...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (13.10.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறைச் செயலாளர் திருமதி வினி மகாஜன் இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி பெ.அமுதா இ.ஆ.ப., ஜல் ஜீவன் திட்டத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் திட்ட இயக்குநர் விகாஸ் ஷில் இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஷ் அகமது இ.ஆ.ப., தமிழ்நாடு உயிர்நீர் திட்டத்தின் திட்ட இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.