தேவையான பொருட்கள் :
பேரீச்சம் பழம் – 1 கப்
கேரட் துருவல் – 1 கப்
தேங்காய் பால் – 2 கப்
உலர்ந்த திராட்சை – 1/2 கப்
பாதாம் பருப்பு – 10
ஏலக்காய் பவுடர் / சிறிதளவு
தண்ணீர் – 1 கப்
செய்முறை :
ஸ்டெப் 1 – முதலில் பேரீச்சம் பழங்களை தண்ணீர் சேர்த்து அரைத்து பேரீச்சம்பழ பேஸ்ட்டினை தயார் செய்து கொள்ளவும்.
ஸ்டெப் 2 – பின்னர் கேரட் துருவலையும் தண்ணீர் சேர்த்து அரைத்து கேரட் விழுதினை தயார் செய்து கொள்ளவும்.
ஸ்டெப் 3 – பாதாம் பருப்பை எண்ணெய் இல்லாமல் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 4 – ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள பேரீச்சம் பழம் மற்றும் கேரட் விழுதுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.
ஸ்டெப் 5 – இத்துடன் தேங்காய்ப் பால் மற்றும் ஏலக்காய் பவுடர் சிறிதளவு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
ஸ்டெப் 6 – மிதமான சூட்டில் நன்றாக கொதிக்க வைக்கவும்.
ஸ்டெப் 7 – உலர்ந்த திராட்சை மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
ஸ்டெப் 8 – சத்தான சுவையான ஸ்பெஷல் பேரீச்சம்பழ கேரட் பாயாசம் தயார்.
குறிப்பு : இந்த ஸ்பெஷல் பேரீச்சம்பழ கேரட் பாயாசத்திற்கு பேரீச்சம் பழத்திலிருக்கும் இனிப்பே போதுமானது. சர்க்கரையோ வெல்லமோ சேர்க்க வேண்டிய அவசியமில்லை. கூடுதல் இனிப்பு தேவைப்படுபவர்கள் வேண்டுமானால் தேவையான சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.