கலைஞர் உருவம் பொறித்த 100 ரூபாய் நாயணம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிட்டார்.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது. இந்த நாணயத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது.

இந்நிலையில் மாலை சென்னை வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்படி கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர் ஆற்றிய உரையில்,
கலைஞர் நாணயம் வெளியிட்ட மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
என்னுடைய உணர்வுகளை எப்படி விவரிப்பது என்று சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இங்கே நின்று கொண்டிருக்கிறேன்” தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி, கலைஞர் பெயரிலான திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மெட்ரோ ரயில், நாமக்கல் கவிஞர் மாளிகை போன்றவற்றை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி என்று தனது உரையில் கூறியுள்ளார்.