கண் மருத்துவ உதவியாளர் வேலைக்கு ரூ.1,12,400 சம்பளமா…?

தமிழகத்தில் காலியாக உள்ள கண் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தற்காலிக அடிப்படையில், இந்த பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை, பிப்ரவரி 7ஆம் தேதி மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 93 கண் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் மார்ச் 9க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது. 

நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (Medical Services Recruitment Board(MRB)

மேலாண்மை : மாநில அரசு

காலிப்பணியிடம் எண்ணிக்கை: 93

பணி விவரம்: கண் மருத்துவ உதவியாளர்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பிக்கும்

கடைசி தேதி: 09.03.2023

கல்வி தகுதி: அரசு மருத்துவக் கல்லூரி அல்லது மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் அங்கீகாரம் பெற்ற கண் மருத்துவ படிப்புகளில் (Ophthalmic Assistant course) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10th மற்றும் 12th STD என்ற வகையில் பள்ளிக் கல்வி பயின்றிருக்க வேண்டும். Optometry துறையில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், இதற்கு விண்ணப்பிக்கலாம். ஊதியம் நிலை 11இன் படி, குறைந்தபட்சம் ரூ.35,400 முதல் அதிகபட்சம் ரூ.1,12,400 வரை மாத ஊதியம் என்ற முறையில் வழங்கப்படும். வயது வரம்பு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 18 முதல் 32 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு, சலுகை உள்ளிட்ட இன்ன பிற விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.
விண்ணப்ப கட்டணம் விண்ணப்பதாரர்களுக்கு (SC/SCA/ST/DAP(PH) ரூ.300, மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.600 என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை

• பத்தாம் வகுப்பு 12ம் வகுப்பு, சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும், சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். இதற்கு எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு கிடையாது.

• விண்ணப்பிக்க, https://mrbonline.in/ – என்ற இணையதள முகவரி வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

• தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற வழி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

• முகப்புப் பக்கத்தில் Online Registration என்பதை ‘க்ளிக் செய்யவும்.

• Assistant Surgeon (General) என்ற பதவியை ‘க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

• மொபைல் எண் மற்றும் இ-மெயில் முகவரி கட்டாயமாகும்.

• அனைத்துத் தகவல்களும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் வாயிலாக மட்டுமே பகிரப்படும்.

• வண்ணப் புகைப்படம் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்து ஆகியவற்றையும் தேர்வர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டியது கட்டாயம்.

• கேட்கப்பெற்ற உரிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை எனில், விண்ணப்பம் முழுமை பெற்றதாக கருதப்படாது. கிளிக் பண்ணுங்க….

https://www.mrb.tn.gov.in/

https://mrbonline.in/