13 கெட்டப்புகளில் சூர்யா!

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் இன்னமும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து மிகபிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகின்றன.

சூர்யாவின் 42வது படமான இப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிப்பதாகவும், இந்த படத்தில் சூர்யா 13 வேடங்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், சரித்திர கதையை மையமாக வைத்து 3டி தொழில்நுட்பத்தில்  தயாராகி வரும் இப்படம் ஐந்து மொழிகளில் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த தகவல்களால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.