மத்திய அரசால் கடந்த 2019-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட PM Kisan Yojana திட்டம். இந்த திட்டத்தால் நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற விவசாயிகள் நிதி பலன்களை பெறுகின்றனர். ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாயை உதவி தொகையாக கொடுத்து வருகிறது. ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு 3 சம தவணைகளாக, 4 மாத இடைவெளியில் தலா ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியானது விவசாயிகளின் பேங்க் அக்கவுண்ட்டில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.
2019-ல் துவக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இதுவரை விவாயிகளுக்கு 13 தவணை நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் இணைந்திருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகள் PM Kisan Yojana திட்டத்தின் 14-ஆம் தவணை நிதிக்காக காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இந்திய அரசின் வேளாண்மை அமைச்சகம், PM Kisan Yojana திட்டத்தின் 14வது தவணையை வரும் ஜூலை 27, 2023 இன்று வெளியாகிறது. இன்று காலை 11 மணிக்கு ராஜஸ்தானின் சிகாரில், பிரதமர் மோடி விவசாயிகளைச் சந்திக்கிறார். மேலும் அவிவசாயிகளுக்கு 14வது தவணை நிதியை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் பலனை பெற விரும்பும் விவசாயிகள், தங்களது பேங்க் அக்கவுண்ட்டை தங்களின் ஆதார் கார்ட்டுடன் இணைத்து, பூர்த்தி செய்த e-KYC-யை PM கிசானின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://pmkisan.gov.in-ல் சப்மிட் செய்யலாம்.