இன்புளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் 26ஆம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இன்புளூயன்சா பரவலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதால், தமிழக அரசும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.