+2 பொதுத்தேர்வு! ஏன் இத்தன பேர் எழுதல?

தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற +2 பொதுத்தேர்வை 50674 பேர் எழுதவில்லை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாணவர்கள் ஏன் இந்த தேர்வை எழுதாமல் இருந்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி இடை நிற்றலை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்டதே அதற்குத்தான். அதன்பின் பஸ்பாஸ் திட்டம், இலவச சைக்கிள், இலவச லேப்டாப் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது இடைநிற்றலை தவிர்க்கவே.
முக்கியமாக பெண் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் திட்டமும் மாணவியர்கள் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவேத்தான்.

12ம் வகுப்பு இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வை பலர் எழுதவில்லை என்ற விவரம் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற +2 பொதுத்தேர்வை 50674 பேர் எழுதவில்லை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாணவர்கள் ஏன் இந்த தேர்வை எழுதாமல் இருந்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது மிக மிக அதிகமான எண்ணிக்கை ஆகும். இவர்கள் ஏன் தேர்வு எழுதவில்லை, இவர்களை மீண்டும் தேர்வு எழுத வைப்பது எப்படி, இவர்களுக்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும், அரசு இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட இது கல்வி இடைநிற்றலுக்கு சமமான விஷயம் ஆகும்.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. ஏப்ரல் மாதம் 3 ஆம் நாள் வரை இந்த தேர்வுகள் அடுத்தடுத்து நடக்க உள்ளன. தேர்வு தேதிகள் நல்ல இடைவெளியுடன் அமைக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் எந்த பிரச்சனையும் இன்றி தேர்வுக்கு படிக்க வசதியாக ஒவ்வொரு தேர்விற்கும் இடையில் இடைவெளி விடப்பட்டு உள்ளது. ஆனாலும் மாணவர்கள் பலர் தேர்வை எழுதாமல் போனது அதிர்ச்சி அளிக்கிறது. பள்ளிகளில் இருந்தும், தனித்தேர்வர்களாகவும் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ – மாணவிகள் இந்த பொதுத்தேர்வை எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில்தான் 50 ஆயிரம் பேர் வரை நேற்று எழுதவில்லை.

தமிழ்நாட்டில் பள்ளி இடை நிற்றலை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இப்படி பல திட்டங்கள் இருந்தும் மாணவ, மாணவியர் பலர் பள்ளிக்கும், பின்னர் பள்ளி கல்வி முடித்து கல்லூரிக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்குகிறார்கள். வறுமை, குடும்ப சூழ்நிலை, ஆர்வமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவ, மாணவியர் பலர் கல்லூரி செல்லாமல் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்படுகிறது. தேசிய அளவில் உயர் கல்வியில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உயர் கல்வி சதவிகிதம் 52 ஆக உள்ளது. இதுதான் தேசிய அளவில் அதிகம்.

பல முன்னேறிய நாடுகளை விட நாம் உயர் கல்வியில் டாப்பில் இருக்கிறோம். இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் மேலும் உயர் கல்வியை மேம்படுத்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளி முடித்து கல்லூரி செல்லாமல் இருக்கும் மாணவர்களை கண்டறியும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு போதுமான உதவிகளை வழங்கி, அவர்களை கல்லூரி பக்கம் கொண்டு செல்லும் திட்டம் செயலுக்கு வந்துள்ளது. இதற்காக 2021-22ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இவ்வாண்டு 2022-23ல் உயர்கல்வி தெடர்ந்துள்ளனாரா என்பதனை அறிந்திட ஆராய்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே மேற்படிப்பை தொடர்ந்திடாத 8,588 மாணவர்கள் அரசின் மூலம் தொடர்பு கொள்ளப்பட்டனர். அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. அதேபோல் இந்த 50 ஆயிரம் மாணவர்களுக்கும் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.