2 நிமிட நடைப்பயிற்சியில் உடம்பில் உள்ள சர்க்கரையை குறைக்கலாம்..!

சர்க்கரை நோயாளிகள் உணவு முறையை முற்றிலுமாக மாற்றியும் சுகர் அளவு குறைந்தபாடில்லை என கவலை அடைகின்றனர். ஆனால் 2 நிமிட நடைபயிற்சியில் சுகரை கட்டுப்படுத்தும் வழியை இந்தப் பதிவில் காணலாம். இரவு உணவு சாப்பட்ட பிறகு 2 நிமிடம் சிறிய நடைப்பயிற்சியில் ஈடுபடுவது செரிமானத்தை சீராக்குவதோடு ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

நடைபயிற்சியின் போது தசைகளின் சுறுசுறுப்பான செயல்பாடு அதிகப்படியான குளுக்கோஸை உறிஞ்சுகிறது. சிறந்த ரத்த ஓட்டம், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. சாப்பிட்ட 60 முதல் 90 நிமிடங்களுக்குள் நடைபயிற்சியில் ஈடுபடுவது மட்டுமே பலன் அளிக்கும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

மன அழுத்தம், பதற்றம், மனசோர்வு ஆகிய பிரச்சனையில் இருந்து விடுபடவும் நடைபயிற்சி உதவுகிறது. மனஅழுத்தம் ஏற்படுத்தக்கூடிய கார்டிசோல், அட்ரினலின் ஆகியவற்றின் சுரப்பையும் குறைக்கிறது.
இரவு உணவிற்குப் பிறகு நடைப்பயணம் மேற்கொள்வது serotonin ஹார்மோனை வெளியிடுகிறது. இது சிறந்த தூக்கத்திற்கு உதவுவதோடு நினைவு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

தினசரி சீரான உடல் இயக்கம் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கிறது. தினசரி சில நிமிடங்கள் உடலுக்கு இயக்கம் கொடுப்பது வாயுத்தொல்லை, வயிறு எரிச்சல் போன்ற பிரச்னைகளை குணப்படுத்துகிறது. உடல் அசைவு செரிமான மண்டலத்தின் இயக்கத்தை வேகப்படுத்துகிறது.

சாப்பிட்டதும் நடைபயிற்சியில் ஈடுபடுவதை தினசரி வழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இது சர்க்கரை அளவை குறைப்பதோடு உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.