10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாவட்ட நீதி மன்றங்களில் 2329 பேருக்கு வேலைவாய்ப்பு..!

சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2,329 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், இளநிலை கட்டளை பணியாளர், முதுநிலை கட்டளை பணியாளர், கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், ஒளிப்பட நகல் எடுப்பவர், மின் தூக்கி இயக்குபவர், ஓட்டுனர், இரவு காவலர் மற்றும் மசால்ஜி உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி மே 27 ஆகும். ஆர்வம் உள்ளவர்கள் mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் விண்ணப்பிக்க வேண்டும். வீடியோ பதிவு எடுக்கும் பணியிடங்களுக்கு முன் அனுபவம் அவசியம். 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, ST 5 ஆண்டுகளும், MBC, DNC, BC and BCM பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், ஓட்டுனர் பணியிடங்களுக்கு ரூ. 19,500 முதல் 71,900 ஊதியம் வழங்கப்படும். இளநிலை கட்டளை நிறைவேற்றுநர், கட்டளை எழுத்தர், கட்டளை பணியாளர் ரூ. 19,000 முதல் 69,900 ஊதியம் வழங்கப்படும்.