நாட்டில் அல்ட்ரா வயலட் நிறுவனம் புதிய மின்சார மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த பைக்கை ஸ்டாண்டர்ட் மற்றும் ரீகான் என இரண்டு வகைகளில் வாங்கலாம். அல்ட்ரா வயலட் (Ultraviolette F77 Mach 2) இ-பைக் வெறும் 2.8 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும். இந்த பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 155 கி.மீ. இது டெஸ்லா எலக்ட்ரிக் காரை விட மூன்று மடங்கு வேகமானது. ஒரு டெஸ்லா கார் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட 5.6 வினாடிகள் ஆகும்.
இந்த மின்சார மோட்டார்சைக்கிளில் 10.3kWh பேட்டரி பேக் உள்ளது. இது 40.2 பிஎச்பி பவரையும், 100 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பைக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் 323 கிலோமீட்டர் வரை ஓட முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய அல்ட்ரா வயலட் இ-பைக்கில் 3-லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், 10-லெவல் ரீஜெனரேட்டிவ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இது ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், டெல்டா வாட்ச், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் பெறுகிறது.
இந்த எலெக்ட்ரிக் பைக்கை வயலட் ஏஐ ஆதரிக்கிறது. அதன் உதவியுடன் நீங்கள் பைக்கில் இருந்து விழும்போது எச்சரிக்கையைப் பெறுவீர்கள். ரிமோட் லாக்டவுன், க்ராஷ் அலர்ட், டெய்லி ரைடிங் ஸ்டேட்டஸ், ஆண்டி-கோலிஷன் வார்னிங் சிஸ்டம் ஆகியவை இதில் அடங்கும். அல்ட்ரா வயலட் எலக்ட்ரிக் பைக்கின் ஸ்டான்டர்டு வேரியன்ட்டின் விலை ரூ.2.99 லட்சமாகவும், ரீகான் வேரியன்ட்டின் விலை ரூ.3.99 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைகள் எக்ஸ்-ஷோரூம் ஆகும்.