தமிழகத்தில் தோட்டக்கலை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் காய்கறிகள், பழங்கள், மலர்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு 40% மானியம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் வேளாண் இடுபொருள்களை வாங்க உதவும் வகையில், இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நுண்ணீர் பாசன திட்டத்திற்காக சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும் பிற விவசாயிகளுக்கு 70% மானியமும் அரசால் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சொந்தமாக நிலம் வைத்திருக்க வேண்டும் அல்லது 10 ஆண்டுகளுக்கு நிலத்தை குத்தகை எடுத்து இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் http://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/login.php என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.