தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை இணைந்து தனியார் நிறுவனங்கள் மூலம் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் முகாம்களை நடத்தி வருகின்றனர். இந்த முகமாம்களில் நூற்றுக்கணக்கான தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலையில்லா இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கி தருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு, தஞ்சாவூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 16, 18, 19 ஆகிய தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது. கீழ்காணும் தகுதிகள் உள்ள இளைஞர்கள் இந்த முகாம்களில் தகுந்த சான்றிதல்களோடு பங்கு பெறலாம்.
தேவையான கல்வித்தகுதிகள்:
இம்முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் I.T.I., Diploma, B.E., Nursing, B.E., B.Tech., உள்ளிட்ட பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம் என அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்து கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
வேலைவாய்ப்பு முகாமிற்கு தேவையான சான்றிதழ்கள்
• முகாம் முன்பதிவு நகல்
• சுயவிவர குறிப்பு (Resume)
• கல்வி சான்றிதழ்கள்
• ஆதார் கார்டு
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடங்கள்!
ஈரோடு – நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெருந்துறை ரோடு, ஈரோடு மாவட்டம்.
திருவள்ளூர் – தர்மமூர்த்தி ராவ் பஹதூர் காலவள கண்ணன் செட்டி இந்து கல்லூரி, தர்மமூர்த்தி நகர், திருவள்ளூர்.
தஞ்சாவூர் – ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரி, ஏனாதி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் – 614615
திருவண்ணாமலை – அருணை பொறியியல் கல்லூரி, வேலுநகர், தென்மாத்தூர், திருவண்ணாமலை வட்டம்.
இராணிப்பேட்டை – பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாவல்பூர், ராணிப்பேட்டை.
நாள் மற்றும் நேரம்
ஈரோடு – 19.3.2023 – காலை 8மணி – மாலை 3மணி
திருவள்ளூர் – 18.3.2023 – காலை 9மணி – மாலை 3மணி
தஞ்சாவூர் – 18.3.2023 – காலை 8.30மணி – மாலை 3மணி
திருவண்ணாமலை – 16.3.2023 – காலை 8மணி – மாலை 3மணி
இராணிப்பேட்டை – 18.3.2023 – காலை 9மணி – மாலை 5மணி
முன்பதிவு செய்வது எப்படி?
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
STEP 1 : தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் லாகின் செய்யவும். புதிய பயனராக இருந்தால் புது ஐடி கிரியேட் செய்யவும்.
STEP 2 : டாஷ்போர்டில் Job Fair பட்டியல் இருக்கும். அதில் கிளிக் செய்யவும்.
STEP 3 : உங்கள் ஊரின் முகாம் அறிவிப்பின் மீது கிளிக் செய்யவும்.
STEP 4 : தற்போது, Apply என்ற பகுதியை கிளிக் செய்யவும்.
STEP 5 : தற்போது உறுதிபடுத்தல் மெயில் வரும்.
STEP 6 : முன்பதிவு செய்த ஆவணங்களை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்க..
ஈரோடு – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/172303130010
திருவள்ளூர் – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/142303090008
தஞ்சாவூர் – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/242303090011
திருவண்ணாமலை – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/12303070009
இராணிப்பேட்டை – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/352303070004