ஜியோ ஏர்ஃபைபர் சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 19) அன்று அகமதாபாத், பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் பூனா உட்பட 8 இந்திய நகரங்களில் தொடங்கப்பட்டது. இந்த வயர்லெஸ் இன்டர்நெட் சேவை கடந்த மாதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 46வது வருடாந்திர ஆண்டு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஜியோ ஏர்ஃபைபர் மூலமாக யூசர்கள் 1Gbps வரையிலான இன்டர்நெட் ஸ்பீட் மற்றும் 550 டிஜிட்டல் டிவி சேனல்கள் போன்றவற்றை அனுபவிக்கலாம். கூடுதலாக 16 OTT தளங்களின் சேவையும் அளிக்கப்படும்.
அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் புனேவில் உள்ள யூசர்களுக்கு ஜியோ ஏர்ஃபைபர் வசதி பயன்படுத்துவதற்கு கிடைக்கிறது. இந்த வயர்லெஸ் சிங்கிள் டிவைஸை பவர் சோர்சில் செருகுவதன் மூலமாக இது ஒரு Wi-Fi ஹாட்ஸ்பாட்டாக செயல்படுகிறது. ஒரே ஒரு சேவையை மட்டுமே பயன்படுத்தி டிவி, பிராட்பேண்ட், உலக தரம் வாய்ந்த பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் அனுபவம் போன்றவற்றை யூசர்கள் பெறலாம் என்று ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள் 599 ரூபாய் முதல் துவங்குகிறது.
நாம் ஏற்கனவே கூறியது போல, ஜியோ ஏர்ஃபைபர் யூசர்கள் 550 டிஜிட்டல் TV சேனல்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் அமேசான், பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா, சோனி லைவ், வூட் கிட்ஸ், வூட் செலக்ட் மற்றும் ஜீ5 போன்ற 16-க்கும் மேற்பட்ட OTT அப்ளிகேஷன்களின் சபஸ்கிரிப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இன்டர்நெட் ஸ்பீடில் எந்த ஒரு பாதகமும் ஏற்படாமல் ஸ்மார்ட்போன்கள், பர்சனல் கம்ப்யூட்டர்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட் டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் போன்ற பல்வேறு சாதனங்களை இதில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் ஒரு Wi-Fi ரௌட்டர், ஒரு 4K ஸ்மார்ட் செட்டாப் பாக்ஸ் மற்றும் வாய்ஸ் ஆக்டிவேட்டட் ரிமோட் ஆகியவற்றை கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் ஏர்ஃபைபர் கஸ்டமர்களுக்கு ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது.
ஜியோ ஏர்ஃபைபர் பிளான்கள் மற்றும் இணைப்பு பெறுவது எப்படி?
ஜியோ ஏர்ஃபைபர் ஆறு விதமான பிளான்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பேசிக் பிளானின் விலை 599 ரூபாயாக உள்ளது. இதில் 30Mbps இன்டர்நெட் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. அடுத்தபடியாக ரூபாய் 899 மற்றும் ரூபாய் 1,199 திட்டங்களில் 100Mbps இன்டர்நெட் ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது. ஏர்ஃபைபர் மாக்ஸ் -இன் கீழ் உள்ள பேசிக் பிளானின் விலை 1,499 ரூபாய் ஆகும். இதில் 300Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது. ரூபாய். 2,499 திட்டத்தில் 500Mbps இன்டர்நெட் ஸ்பீடு அன்லிமிடெட் டேட்டாவை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. 1Gbps இன்டர்நெட் ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா வழங்கக்கூடிய ஜியோ ஏர்ஃபைபர் திட்டம் 3,999 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அனைத்து திட்டங்களும் 6 மாதம் அல்லது 12 மாத காலத்திற்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்துடன் 550 டிஜிட்டல் சேனல்கள் மற்றும் OTT அப்ளிகேஷன்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த புதிய திட்டங்கள் திட்டங்களை Jio.com அல்லது அருகில் உள்ள ஜியோ ஸ்டோரில் பெற்றுக் கொள்ளலாம். வாட்ஸ் அப்பில் புக்கிங் செய்வதற்கு யூசர்கள் 60008-60008 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம்.