உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த 6 இந்தியர்கள்

உலகளவில் சக்தி வாய்ந்தவர்களாக திகழும் 100 பெண்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அண்மையில் வெளியிடப்பட்ட நடப்பாண்டுக்கான பட்டியலில் இந்தியப் பெண்கள் 6 பேர் இடம்பிடித்துள்ளனர்.

தொடர்ந்து 4வது ஆண்டாக இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இம்முறை 36வது இடத்தையும், ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் ரோஷ்ணி நாடார் மல்கோத்ரா 53வது இடத்தையும், இந்தியப் பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவரான மாதவி புரி புச் 54வது இடத்தையும், இந்திய எஃகு ஆணையத்தின் (செயில்) தலைவரான சோமா மண்டல் 67வது இடத்தையும், பயோகான் நிர்வாகத் தலைவரான கிரண் மஜூம்தார் ஷா 77வது இடத்தையும், நைகா நிறுவனரான ஃபல்குனி நாயர் 89வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த 6 பேரில் மாதவி புரி புச், சோமா மண்டல் ஆகிய இருவரையும் தவிர மற்ற நான்கு பேரும் கடந்த ஆண்டுக்கான பட்டியலிலும் இடம்பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பட்டியலில் ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வான்டெர் லையான் முதலிடத்தையும்,
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் 3வது இடத்தையும்,
ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டு போராட்டங்களுக்கு முக்கியக் காரணமாக இருந்த மாஷா அமினி 100வது இடத்தையும் பிடித்துள்ளனர்.