ட்டுமொத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களையும் அள்ளித்தூக்கும் விதமாக, 8 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி, 30W டர்போசார்ஜிங் போன்ற அம்சங்களுடன் மோட்டோ ஜி54 (Moto G54) போன் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.
மோட்டோ ஜி54 அம்சங்கள் (Moto G54 Specifications): இந்த போன் 6.5 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 560 பீக் பிரைட்னஸ் வருகிறது.
இதற்கு பாண்டா கிளாஸ் பாதுகாப்பு (Panda Glass Protection) வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரால்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மை யுஎக்ஸ் (My UX) ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7020 6nm) சிப்செட் வருகிறது.
அதோடு ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8-256 ஜிபியு (IMG BXM 8-256 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த மோட்டோ போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. அதோடு 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே. ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் இடம்பெற்றுள்ளது. இந்த மோட்டோ ஜி54 போன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது.
அதோடு எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது. இந்த கேமராவில் 1080p ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதிலும் 1080p ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. 30W டர்போசார்ஜிங் (Turbocharging) சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் IP52 தர டஸ்ட் மற்றும் ஸ்ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) வருகிறது. மேலும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த போன் பேட்டரியோடு சேர்த்து 192 கிராம் எடை கொண்டுள்ளது. ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப் – சி 2.0 (USB Type-C 2.0), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் டூயல் 4ஜி (Dual 4G) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.
இந்த போன் மிட்நைட் ப்ளூ (Midnight Blue), மின்ட் கிரீன் (Mint Green) மற்றும் பேர்ல் வைட் (Pearl Blue) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த மோட்டோ ஜி54 போன் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (செப்டம்பர் 13) முதல் விற்பனைக்கு வந்துள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
இந்த போனுக்கு அறிமுக சலுகையாக ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை பெற ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank) கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டும். பட்ஜெட் விலையில் நல்ல சிப்செட், பேட்டரி பேக்கப் மற்றும் கேமரா வேண்டுமானால், இந்த மோட்டோ ஜி54 போன் நல்ல தேர்வாக இருக்கும்.