78வது சுதந்திர தினம்: டெல்லியில் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று கோலகலமாக கொண்டாடப்படுகிறது. 78-வது சுதந்திர தினம் விக்சித் பாரத் @2047 என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. இந்தியா 2047-ல் வளர்ந்த நாடாக வேண்டும் என்பது இதன் நோக்கம் ஆகும்.

இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு அலுவலங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன. செங்கோட்டையில் பிரதமர் மோடி சுதந்திர தின கொடி ஏற்றுவது 11-வது முறையாகும். இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா, ‘விக்சித் பாரத்’ என்ற சிந்தனையோடு கொண்டாடப்படுகிறது.

78-வது சுதந்திர தினம் விக்சித் பாரத் @2047 என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. இந்தியா 2047-ல் வளர்ந்த நாடாக வேண்டும் என்பது இதன் நோக்கம் ஆகும். 2047 ஆம் ஆண்டு இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின விழா முழு ஒத்திகை நிகழ்ச்சி டெல்லி செங்கோட்டையில் நேற்று முன் தினம் நடைபெற்றது. சுதந்திர தினவிழாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி என அதிமுக்கிய பிரமுகர்கள் பங்கேற்கபதால், டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளதால், பாதுகாப்பில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உளவுப்பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தலைநகரில் மட்டும் பாதுகாப்பு பணிக்காக 3,500 போக்குவரத்து போலீசார், 10 ஆயிரம் டெல்லி போலீசார் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டை முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினர், டெல்லி போலீசார் என தீவிர கண்காணிப்பு உள்ளது. செங்கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாடில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

நன்றி: ANI