தமிழகத்தில் 9 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து போலீஸ் டி ஜி பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மாற்றப்பட்ட அதிகாரிகளின் பெயர் விவரம் வருமாறு:-
1.முத்துமாணிக்கம்- திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டான இவர் தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டானார். 2. பிரித்தி- மதுரை மாவட்டம் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர் ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.
3. வேல்முருகன்- மதுரை நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பணியாற்றிய இவர் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
4. யாஷ்மின்- திருச்சி மாவட்டம் முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டான இவர் தமிழ்நாடு போலீஸ் அகாடமி துணை போலீஸ் சூப்பிரண்டானார். 5. பாலசுந்தரம்- நெல்லை (கிராமப்புற) துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர் மதுரை மாவட்டம் ஊமாச்சிகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.
6. கூத்தலிங்கம்- திருச்சி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டான இவர் கள்ளக்குறிச்சி (தலைமையக) கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.
7. இளஞ்செழியன்- தாம்பரம் போலீஸ் கமிஷனரக சி பி சி ஐ டி துணை போலீஸ் சூப்பிரண் டாக பணியாற்றிய இவர் மணிமங்கலம் சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனராக மாற்றப்பட்டார்.
8. ராஜபாண்டியன்- தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தில் உள்ள மணிமங்கலம் சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனரான இவர் ஈரோடு மாவட்ட சிவிள் சப்ளை சி ஐ டி துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.
9. சுபாஷ் சந்திர போஸ்- நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டான இவர் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.
====
Tamil Nadu, Police Officers, Transfer, DGP Shankar Jiwal, Order, தமிழகம், போலீஸ் அதிகாரிகள், இடமாற்றம், டிஜிபி சங்கர் ஜிவால், உத்தரவு